சண்டிகர்: கடந்த ஆண்டு நடந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூஹ் மாவட்டத்தில் 24 மணி நேர இணையதள தடை விதிக்கப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பிரஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி நடைபெற்றது.
வன்முறையில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் வரை காயமடைந்துள்ளனர். அன்று இரவு குருகிராமில் உள்ள ஒரு மசூதியைத் தாக்கி அதன் இமாமைக் கொன்றனர். இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் நடந்து முதலாம் ஆண்டை முன்னிட்டு மீண்டும் ஒரு அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும் வகையில், நூஹ் மாவட்டத்தில் இன்று (21.07.2027) மாலை 6 மணி முதல் நாளை (22.07.2024) மாலை 6 மணி வரை இருபத்தி நான்கு மணிநேரம் இணையப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அனுராக் ரஸ்தோகி இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.