தனுஷ் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ள ராயான் படம் ஜூலை 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. நடிகர் மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தனுஷ், 2017-ம் ஆண்டு இயக்குநராகப் பொறுப்பேற்றார். அந்த ஆண்டு பா பாண்டி என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து, நடிப்புக்கு அலுத்துப்போனதால், அதில் ஓய்வு எடுத்த தனுஷ், தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்துள்ளார்.
படத்தின் பெயர் ராயன். வடசென்னை, புதுப்பேட்டை ஸ்டைலில் உருவாகியுள்ள படம் இது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷும் ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தனுஷுடன் வரலக்ஷ்மி சரத்குமார், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உள்ளது.
நடிகர் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 26ஆம் தேதி ராயன் படம் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால், அதன் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், ராயன் படம் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் நீங்கள் நடிக்காமல் ராயனை இயக்கியிருந்தால் உங்கள் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பீர்கள்? அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தனுஷ் பதிலளித்தார். முன்னதாக தனுஷ் பல்வேறு பேட்டிகளில் ரஜினிகாந்துக்காக தன்னிடம் கதை இருப்பதாக கூறியிருந்தார். அந்த கதையை ரஜினியும் பேசியுள்ளார். ஒரு வேளை தனுஷும் ரஜினியும் சொன்ன கதை ராயனாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு கல்யாண் பவன் என தனுஷ் பதில் சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது. எந்த தெலுங்கு நடிகருடன் மல்டி ஸ்டாரர் படம் செய்வீர்கள் என்று கேட்டதற்கு, ஜூனியர் என்.டி.ஆர் அவரைப் பிடிக்கும் என்றும் அவருடன் நடிக்க விரும்புவதாகவும் கூறினார்.