சென்னை: என் மனசுக்கு பிடித்தது இந்த பொறுப்பு மட்டும்தான்… ஓப்பனாக தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி.
தமிழகத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது தொடர்பாக திமுக கட்சியின் அமைச்சர்கள் கூறும் போது முதல்வர் ஸ்டாலின் தான் அது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. அதன்பிறகு திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞர் அணி தான் முதன்மையான அணி. நான் துணை முதல்வராக பொறுப்பேற்க போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திதான். முதல்வருக்கு அனைத்து அமைச்சர்களும் துணையாக தான் இருப்போம்.
எனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்தாலும் என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு தான். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதன் மூலம் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கப் போகிறார் என்று வந்த தகவல்கள் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.