சமீப காலமாக பங்குசந்தை நிலவரம் மற்றும் சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளால் தொடர்ந்து உயர்வை சந்தித்த தங்கத்தின் விலை, தற்போது குறைந்துள்ளதுடன், இது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை உச்சம் எட்டியது. அதன் பின்னர் மே மாதத்தில் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் விலை நிலைத்திருந்தது.

இந்நிலையில், ஜூன் மாத ஆரம்பத்தில் மீண்டும் விலை உயரும் போக்கை காட்டு தங்கம், கடந்த சனிக்கிழமைக்கு பின்னர் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, ஜூன் 7ஆம் தேதி அன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,980, ஒரு சவரன் ரூ.71,840 என விற்பனையானது.
இன்று, ஜூன் 9ம் தேதி நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955ஆகவும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.71,640ஆகவும் உள்ளது. இது நகைகள் வாங்க விரும்புபவர்களுக்கு நேர்த்தியான தருணமாகும்.
மேலும், 18 காரட் தங்கம் விலையும் ரூ.40 குறைந்த நிலையில் இருக்கிறது. தற்போது, ஒரு கிராம் ரூ.7,345க்கும், ஒரு சவரன் ரூ.58,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது பருவ விழாக்கள் மற்றும் திருமண பருவங்களில் தங்கம் வாங்கும் மக்களுக்கு வசதியாக இருக்கக்கூடும்.
அதே நேரத்தில், வெள்ளி விலை மட்டும் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்த நிலையில், தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.118க்கும், ஒரு கிலோ ரூ.1,18,000க்கும் விற்கப்படுகிறது.
மொத்தத்தில், தங்கத்தின் விலை சமீபத்திய இறக்கத்தால், நகைத் தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோரிடையே புதுப்போக்கை உருவாக்கியுள்ளது. மேலும் சில நாட்களில் விலை மீண்டும் உயரும் வாய்ப்பும் இருப்பதால், இந்த தருணம் வாங்க விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம்.