அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ், தனது காதலி லாரன் சான்சேவுடன் ஜூன் 24 முதல் 28 வரை இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், SAN GIOGIO MARGGIORE தனித் தீவையே திருமணத்திற்காக முழுமையாக வாடகைக்கு எடுத்துள்ளனர். விருந்தினர்கள் தங்குவதற்காக 5 ஆடம்பர ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் அனைத்து வாட்டர் டேக்ஸிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. திருமணம் பெசோசின் சொந்தமான 4300 கோடி மதிப்புடைய படகில் நடைபெற உள்ளது.

இந்த திருமண ஏற்பாடுகள் வெனிஸ் மக்களில் சிலரிடையே கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது. பெரும்பாலும் சுற்றுலா வருவாயை நம்பியுள்ள வெனிஸ் நகரத்தில், அதிகமான சுற்றுலா பயணிகளால் பாரம்பரிய இடங்கள் சேதமடைகின்றன என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது. இந்நிலையில், இந்த திருமண நிகழ்வின் காரணமாக ஒரு வாரம் SAN GIOGIO தீவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மறுக்கப்படுவதும், வாழ்க்கையின் இயல்பு பாதிக்கப்படும் என்பதும் எதிர்ப்பிற்கு காரணமாக இருக்கிறது.
வெனிஸ் நகரில் பெசோசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமண நாள் முதல் நீர் வழிகளில் போராட்டக்காரர்கள் வாட்டர் டேக்ஸிகளை தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், வெனிஸ் மேயர் லுயிகி ப்ரூக்னாரோ பெசோசின் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்வால் வர்த்தக ரீதியில் பலன் கிடைக்கும் என்றாலும், வெனிஸ் மக்கள் பாரம்பரிய பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதே முக்கியமான கோரிக்கையாக உள்ளது.