இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே 9, 2015 அன்று அறிமுகப்படுத்திய பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்ற இந்த அரசு ஆயுள் காப்பீட்டு திட்டம், இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு நிதியாதார பாதுகாப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இது வருடம் தோறும் புதுப்பிக்கக்கூடிய ஒரு ஆண்டு கால காப்பீட்டுத் திட்டம். இயற்கையான மரணம் அல்லது விபத்து காரணமாக பாலிசிதாரர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டம், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழியாக வாழ்க்கை காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. 18 முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் மற்றும் வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் இதில் பங்கேற்கலாம். ஒரே நபர் பல்வேறு வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்தாலும், ஒரே ஒரு கணக்கில்தான் இந்த திட்டத்தில் பதிவு செய்ய முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சம் ஆகும். இறப்பின் காரணம் ஏதேனும் இருந்தாலும், அந்த தொகை குடும்பத்திற்கு வழங்கப்படும். ஒரே ஆண்டு காலக்கெடுவில் செயல்படும் இந்த திட்டத்திற்கு வருடாந்தம் ரூ.436 பிரீமியம் செலுத்த வேண்டியது கட்டாயம். இந்த தொகை நேரடியாக கணக்கில் இருந்து ஆட்டோ-டெபிட் செய்யப்படும். முதன்முறையாக சேருபவர்களுக்கு, அவர்கள் சேரும் மாதத்தின்படி பிரீமியம் தொகை வேறுபடும்.
உதாரணமாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சேருபவர்களுக்கு முழு ரூ.436 வசூலிக்கப்படும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை சேருபவர்களுக்கு ₹342, டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ₹228, மார்ச் முதல் மே வரை சேருபவர்களுக்கு ₹114 மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், அடுத்த வருடம் புதுப்பிக்கும்போது அனைவரும் முழு ரூ.436 தொகையை செலுத்தவேண்டும்.
இந்த திட்டம் முழுக்க முழுக்க அரசு அனுசரணையில் செயல்படுவதால், முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் காப்பீடு பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. குறைந்த பிரீமியம் செலுத்தி அதிக காப்பீடு பெற முடியும் என்பதாலேயே, இதனை ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகச்சிறந்த திட்டமாக அரசு உருவாக்கியுள்ளது. பாலிசி ஆண்டின் எந்த கட்டத்திலும் இணைவதற்கும், எளிய செயல்முறைகள் மூலம் பதிவு செய்யக்கூடியதுமாகும். சமூக நலனை முன்னிட்டு செயல்படும் இந்த திட்டம், இயற்கை மரணம் அல்லது விபத்து ஏற்படும் போது குடும்பத்துக்கு திடீரென வழங்கும் நிதியுதவியாகும்.