புதுடெல்லி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல், விவசாயிகள் சங்க தலைவர்கள் சந்திப்பு. இன்று காலை ராகுல் அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள் 7 பேர் பங்கேற்கின்றனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற லோக்சபாவில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.
கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர்கள், நாடு முழுவதும் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி புதிய போராட்டங்கள் தொடங்கப்படும். தனிநபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி மக்களவையில் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்த விவசாயிகள் ஆகஸ்ட் 15-ம் தேதி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.