சோலார் பேனல்கள்:
ஒரு கோடி வீடுகளில் சூரிய சக்தியை நிறுவி, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிஎம் சூர்யாகர் முஃப்ட் பிஜிலி யோஜனா’ திட்டத்தை ஆதரிப்பதற்காக, சோலார் செல்கள் மற்றும் பேனல்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அதேசமயம், உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் கருத்தில் கொண்டு, சோலார் கண்ணாடி, கண்ணாடி மற்றும் மெல்லிய தாமிர இணைப்புக்கான சுங்க வரி விலக்கு நீக்கப்படுகிறது.
முக்கிய கனிமங்கள்
எரிசக்தி மாற்றத்திற்கு தேவையான முக்கிய கனிமங்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. அனல் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, ராணுவம், தொலைத்தொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் துறைகளுக்குத் தேவையான லித்தியம், தாமிரம் மற்றும் கோபால்ட் உள்ளிட்ட 25 முக்கிய தாதுக்களுக்கு சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய கனிமங்களை பதப்படுத்துவதற்கும் சுத்திகரிப்பதற்கும், அவற்றின் இருப்பை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
மதர்போர்டு
தொலைத்தொடர்பு துறையில் மதர்போர்டுகளின் அடிப்படை வரி 5 சதவீதம் உயர்த்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவற்றுக்கு ஏற்கனவே 10 சதவீதம் வரி வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 சதவீதம் வசூலிக்கப்பட உள்ளது. இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இவற்றின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.