தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பாஜக தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர், பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய், அண்ணாமலைக்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அண்ணாமலை மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவராக இருந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன் பிறகு மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அண்ணாமலை தேசிய அரசியலில் முக்கிய பொறுப்பு ஏற்கப்போகிறார் என்று பாஜக வட்டாரத்தில் கூறப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதையும் உறுதிப்படுத்தியதாக தகவல்கள் உள்ளன.
அண்ணாமலைக்கு மத்திய இணையமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் சிலர் கூறினர், ஆனால் அண்ணாமலை அதனைத் தடுத்துள்ளார். அதேபோல், ஆந்திரா மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்பி ஆகவும் அவர் போட்டியிடக்கூடும் என்ற தகவல் வந்திருந்தாலும் இது உறுதியாக இல்லை. இந்நிலையில் தான் அண்ணாமலை தேசிய பொதுச் செயலாளராக தேர்வு பெற்றதாகவும், அதற்காகவே தருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் திருக்குறள் வசனத்தோடு அண்ணாமலைக்கு வாழ்த்து கூறியுள்ளார். திருவள்ளுவர் மேற்கோளை பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்தது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி மிக முக்கியமான பதவி என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பி.எல். சந்தோஷ் போன்ற தலைவர்கள் இந்த பதவியை வகித்து பின்னர் நாட்டின் முக்கிய இடங்களில் பணியாற்றியுள்ளனர்.
இதனால் அண்ணாமலைக்கு இந்த பதவி அளிக்கப்பட்டது கட்சிக்கான பெரிய பொறுப்பாகும். தற்போது பாஜக சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.