சென்னை: இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,050 ரூபாய்க்கும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து திங்கட்கிழமை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து மாத தொடக்க நாளான செவ்வாய்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 360 ரூபாயும், நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது. கடந்த மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,050 ரூபாய்க்கும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.