பெண்கள் வீட்டில் சமையல் செய்யும் போது சமையல் வேலை சீக்கிரம் முடியவும், சமையல் வேலைக்கான ஒருசில அசத்தலான பயனுள்ள குறிப்புகளை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். காலிஃபிளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் காலிஃபிளவர் வெண்மையாக இருப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் அழிந்துவிடும்.
தோசை மற்றும் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு வெண்டைகாய் சேர்த்து ஆட்டினால் இட்லி தோசை பூ போல மிருதுவாக இருக்கும். சாதம் மிஞ்சிவிட்டால் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சாதத்தை ஆவியில் சூடு பண்ணலாம். சாதம் கொதிக்கும்போது மிஞ்சிய சாதத்தையும் சேர்த்துப் போட்டு வைக்கலாம்.
காய்த்து போன ரொட்டித் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் புதியது போலாகி விடும். கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை எளிமையாக நறுக்கலாம். வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கலாம். மேலும் கண்ணில் இருந்து நீரும் வராது.