தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் ஹிந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படம் உருவாகி சில வருடங்கள் ஆன பிறகும் வெளியாகாமல் முடங்கிக் கிடந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார். இப்படத்தில் பிரசாந்துடன் ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அந்தகன் தீம் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை விஜய் மற்றும் பிரபுதேவா வெளியிட்டனர்.
ஆனால், இந்த பாடல் வெளியானதையடுத்து இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “முதன்முறையாக ஒரு ஆடியோ நிறுவனம் ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறது – மெத்தட் ஆக்டிங்கா?… இந்தப் பாடலின் வரிகள், இசை, கலவை மற்றும் அமைப்பு என்னுடையதுதானா என்பதை சரிபார்க்க நான் எதுவும் கட்டணம் வசூலிக்கவில்லை. (அதாவது நான் பாடலை உருவாக்கினேன். வேறு மாதிரி பயன்படுத்தி வெளியிட்டார்கள் போல)” என்று அவர் கூறினார். இது இசை ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.