சென்னை: பெருங்காயம் அஜீரண கோளாறுகளை சரிசெய்யும். அதேப்போல் அசிடிட்டி பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மிகவும் சிறந்த மருத்துவக்குணங்களை உள்ளடக்கி உள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காயம் மிகவும் நல்லது என்று கூறப்பட்டு உள்ளது. தினமும் காலையில் நீரிழிவு நோயாளிகள் சுடுநீரில் பெருங்காயத்தூள் சேர்த்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
அதேப்போல் சர்க்கரை நோய் இல்லாதவர்களும் அதை குடித்தால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம். பெருங்காயத்தூள் சேர்த்த சுடுநீரை குடிப்பதால் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்யும். இதனால் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
மேலும் இந்த பெருங்காயத்தூள் கலந்த சுடுநீரை குடிப்பதால் எலும்புகள் வலுவடையும். மேலும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். மேலும் பெருங்காயத்தில் உள்ள ஆன்டி – ஆக்சிடண்டுகள் ரத்த சோகையை சரிசெய்யும். மேலும் புற்று நோய் ஏற்படுவதை தடுக்கும். அதேப்போல் பற்களின் வலிமைக்கு உதவுகிறது.