‘அயோத்தி’ திரைப்படம் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, இந்தி நடிகர் யஷ்பால் சர்மா மற்றும் பலர் நடிக்கும் படம். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார்.
இந்தப் படம் 2023-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இது ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா நடிப்பார் என்று தகவல்கள் வந்துள்ளன.

அதற்கான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடித்து வரும் நாகார்ஜுனா, அடுத்து ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய கார்த்திக் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இது அவரது 100-வது படம். அதன் பிறகு, ‘அயோத்தி’ படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.