மலையாள சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான சுரேஷ்குமாரின் மகளாக பிறந்த கீர்த்தி சுரேஷ், சிறுவயதிலேயே திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் கதாநாயகியாக புது பரிமாணம் பெற்று, தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால் ரஜினி முருகன் திரைப்படமே அவருக்கு பெரிய கமெர்ஷியல் பிரேக் கொடுத்தது. அதன் பின்னர், தமிழில் நிலையான மார்க்கெட்டை உருவாக்கிய நடிகையாக கீர்த்தி கச்சிதமாக வளர்ந்தார்.

விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்த கீர்த்தி, தனது நடிப்புத் திறமையை நடிகையர் திலகம் திரைப்படத்தின் மூலம் மையமே ஆகிவிட்டார். அந்தப் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றதும், அவரை தனித்துவமான நடிகையாக உயர்த்தியது. அதன் பின்னர், பெண் மையமான கதைகளான பெண்குயின், சாணிக் காயிதம், ராகு தாத்தா போன்ற படங்களிலும் தன்னை மாறுபட்ட விதமாக காட்டினார்.
இந்நிலையில், கீர்த்தி தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு பாலிவுட் பிரவேசமாக வந்த ‘Baby John’ படத்திலிருந்தும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், வாழ்க்கையில் புதிய பக்கம் திறந்துவிட்டதாக ரசிகர்களிடம் தெரிவிக்கிறார். இப்போது ஹனிமூன் பயணமாக அவர் ஊர் சுற்றி வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பொதுவாகவே சுறுசுறுப்பான நடிகையான கீர்த்தி, தன் நிஜ வாழ்க்கையிலும் அதே அளவு நேர்த்தியோடு வாழ்கிறார். ரசிகர்கள் தொடர்ந்து அவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை ஆர்வமாக பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது காதல் கணவருடன் கியூட்டான காட்சிகளில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அலைமோதுகின்றன.