சென்னை : எனக்கு முன்பு எந்திரன் கனவு படமாக இருந்தது. தற்போது, வேள்பாரி உள்ளது என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்து உள்ளார்.
`வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் 1 லட்சம் பிரதிகளை கடந்து விற்பனையாவதை முன்னிட்டு சென்னையில் வெற்றிவிழா நடத்தப்பட்டது. இதில் பேசிய இயக்குநர் ஷங்கர், கொரோனா நேரத்தில் வேள்பாரி புத்தகத்தை படித்ததாகவும், பெரும்பாலும் நாவல்கள் உணர்வுகளாக விரியும். ஆனால் வேள்பாரி தனக்கு விஷுவல்களாக விரிந்ததாக தெரிவித்தார்.
எந்திரன் முதலில் தனக்கு கனவுப்படமாக இருந்தது. ஆனால் தற்போது வேள்பாரி உள்ளது என்றும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார்.