அமெரிக்க அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் வெறும் 17 நிமிடங்களில் தனது பிரசாரத்தை அறிமுகம் செய்தார், பிரச்சார பாதையில் அவரது அனல் பறக்கும் பேச்சால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில் தற்போது வெளியாகும் கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது முதல் பிரசாரத்தை தொடங்கிய கமலா ஹாரிஸ், ‘நான் ஒரு வழக்கறிஞர் ஆனால் எனக்கு எதிராக போட்டியிடும் டிரம்ப் கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றத்திற்கு ஓடுகிறார்.
நான் தேர்தலில் வெற்றி பெற்றால், கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவேன், தொழிலாளர் சங்க நடைமுறைகளை எளிமையாக்குவேன், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுவேன் என உறுதியளித்தார்.
ட்ரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவை பின்னோக்கி அழைத்துச் சென்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பதா அல்லது வெறுப்பும் அச்சமும் நிறைந்த தேசத்தில் வாழ வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கமலா ஹாரிஸ் கூறியதையடுத்து மக்கள் கமலா கமலா என ஆரவாரம் செய்தனர்.
இதில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.