தமிழ் சினிமாவின் வைகை புயல் வடிவேலு, தொடர்ந்து கமெடியின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் நிலையில், அவரைச் சுற்றிய சர்ச்சைகளும் பேச்சுகளும் தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கிங் காங் மகளின் திருமணம் நடைபெற்றது. வடிவேலுவும் கிங் காஙும் ஏராளமான படங்களில் சேர்ந்து நடித்ததால், அவர் திருமணத்தில் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் வரவில்லை என்பதால் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், நடிகர் கிங் காங் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “வடிவேலு அந்த நாளில் தனது ஊரில் உள்ள குலதெய்வ கோயிலில் இருந்தார், அதனால்தான் வர முடியவில்லை. ஆனால் அவரது மேனேஜரும் மேக்கப் மேனும் வந்தார்கள். மேலும் அவர் கவரில் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தார். அவரது பாசமான வார்த்தைகளும், உற்சாகம் தரும் பேச்சும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது” என தெரிவித்தார்.
வடிவேலு திருமணத்துக்குப் பிறகு கிங் காஙிடம் பேசியபோது, “முதலமைச்சர் வருவது போல மக்கள் வந்திருக்கிறார்கள். நீங்கள் நல்லபடியாக திருமணத்தை முடித்துவிட்டீர்கள். இது உங்கள் உழைப்பின் பலன்” என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேலு மீதான விமர்சனங்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. ஆனால் அவர் நேர்மையான செயலும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையும் அவரை இன்னும் ரசிகர்களுக்கு நெருக்கமாக்குகிறது. ‘மாரீசன்’ படத்தின் மூலம் அவர் மீண்டும் மாஸ் ரீஎன்ட்ரி கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் இருக்கிறது.