மதுரை: மதுரை மாநகரில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்.
மதுரை மாநகரில் மண்டலம் 3 க்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கோவில், தளவாய் அக்ராஹாரம், வடக்கு மாசி வீதி, பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்த மற்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிற பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
இதில் தமிழ்நாடு மின்வாரியம் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் புதைவட மின்கம்பிகள் அமைத்திடும் பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் வணிக வளாக கட்டடத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாக கட்டடத்தை ஆய்வு செய்தார். மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மேடை அமைக்கும் பணியினை பார்வையிட்டார் இதனை தொடர்ந்து ஆரப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்தார்.