சென்னை: ஜூலை 25-ம் தேதி முதல் தென் மாவட்டங்களில் உள்ள அமமுக நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துவார். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தென் மாவட்டங்களில் உள்ள அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இது தொடர்பாக அமமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:- சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தொகுதியில், 25-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகம் அருகே உள்ள ராஜ் மஹாலில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

26-ம் தேதி மாலை 4 மணிக்கு மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி, மேலக்கோட்டையில் உள்ள ஜிகேஎம் அரண்மனையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
மேலும், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள சுப்புலட்சுமி திருமண மஹாலில் 28-ம் தேதி மாலை 4 மணிக்கும், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள திருவாணாக்காவல் சாலையில் உள்ள ஏ.ஜி. திருமண மஹாலில் 30-ம் தேதி காலை 10 மணிக்கும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.