சென்னை: ஹன்சிகாவை விட்டு பிரிகிறேன் என்று வரும் தகவல்கள் வதந்தி என்று அவரது கணவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.
கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா, தனது கணவரை பிரிந்து விட்டார் என்று செய்தி வெளியானது. கணவரது வீட்டில் இருந்து வெளியேறி, தற்போது மும்பையில் தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார்.
கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனையும், அதனைத் தொடர்ந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடும் தான், ஹன்சிகாவின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விரைவில் விவாகரத்தை நாடப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனாலும் இந்த விவகாரத்தில் ஹன்சிகா தரப்பில் இருந்து மவுனம் காக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் சோஹைல் கட்டாரியா தரப்பில் இருந்து ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஹன்சிகாவை பிரிகிறேனா? அதாவது பிரிவு, மனமுறிவு என்றெல்லாம் வரும் வதந்திகள் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார்.