புதுடெல்லி: தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பாஜக என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்ப அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐயை பயன்படுத்துகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சொல்வது சரிதான். பட்ஜெட் மாநிலங்களுக்கு ஆதரவாக உள்ளது. பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
இட ஒதுக்கீடு
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு எதிரானது பாஜக. ஏன் பிஜேபி பிற்படுத்தப்பட்ட மக்களை இவ்வளவு வெறுக்கிறது? அவர்கள் ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பை விரும்பவில்லை? பாஜகவின் நோக்கம் தெளிவாக இருந்தால் ஓபிசி இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் தொகை
நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த மசோதாவை ஒரு முறை அல்ல ஆயிரம் முறை ஆதரிப்போம். ஓபிசி மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த மசோதாவை எதிர்த்ததன் மூலம் நாடு முழுவதும் பாஜகவின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.