அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் 240 உயிர்கள் பறிபோன துயரம் நீங்கவுமில்லை. அதற்குள், ஒரு புதிய பரபரப்பான சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது. சுமார் 50 பயணிகளுடன் புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று, வானில் பறந்து கொண்டிருக்கும்போதே ரடாரில் இருந்து திடீரென மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைகள், விமான ஊழியர்கள் என பலரும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமுர் பகுதியில் உள்ள டிண்டா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்டோனோவ் ஏஎன்-24 விமானம் தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் சோவியத் யுகத்தில் உருவாக்கப்பட்ட பழைய டர்போப்ராப் வகை விமானம். இதன் பழமை, அதன் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்துள்ளன.
குறுகிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் An-24 விமானங்கள் கடந்த காலத்திலும் பல விபத்துகளில் சிக்கியிருக்கின்றன. தற்போது நடந்த இந்த மாயம், ரஷ்யாவின் உள்ளூர் விமான பாதுகாப்பு தரத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. இருசெய்திகளும் ஒரே வாரத்துக்குள் நிகழ்வது விமான பயணிகளிடம் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
விமானம் தொடர்பான எவ்வித தகவலும் தற்போது கிடைக்காத நிலையில், கடைசி நேரத்தில் விமானம் சென்ற பாதையில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சர்வதேச விமானத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்துள்ளன.