சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-வது சுற்று கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கவுன்சிலிங் கடந்த 14-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி முடிந்தது.
இதைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 2-வது சுற்று கவுன்சிலிங் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும். இந்த சுற்று 30-ம் தேதி வரை நடைபெறும். 178.965 முதல் 143.085 வரை கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். தற்காலிக ஒதுக்கீட்டு உத்தரவு 29-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
30-ம் தேதி மாலை 5 மணிக்குள் அதை உறுதிப்படுத்த வேண்டும். அதன் பிறகு, 31-ம் தேதி காலை 10 மணிக்குள் இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வெளியிடப்படும்.