சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தப் படத்திற்கு அய்யா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குனர் சேரன் இயக்கவுள்ள இந்தப் படம் குறித்த அறிவிப்பு, ராமதாஸின் பிறந்தநாளான நேற்று, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டது. அரி அர்ஜுனா இதில் ராமதாஸின் வேடத்தில் நடிக்கிறார்.

மாயா, நாகேஷ் திரையரங்கம், நெடுஞ்சலை, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தை தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜி.கே.எம். தமிழ் குமரன் தயாரிக்கிறார்.
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வேடத்தில் நடிக்க மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.