ராஷ்மிகா இப்போது இந்தியாவில் பிரபலமான நடிகையாக இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கை கன்னட சினிமாவில் தொடங்கியது. தொடர்ந்து பன்மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
சமீபத்தில் பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்தார். அடுத்து தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதையடுத்து அவரது அடுத்த தெலுங்குப் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். புஷ்பா, அனிமல் படங்களுக்குப் பிறகு இவரது மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விட்டது. தற்போது பாலிவுட் முன்னணி நடிகைகளுக்கு இணையான சம்பளம் வாங்குகிறார்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட் படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படம் குறித்த உற்சாகத்தை பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா. அதில் அவர், “அன்புள்ள தோழர் படம் வெளியாகி 5 வருடங்கள் ஆன நிலையில் இன்னும் பலர் என்னை லில்லி என்றே அழைக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்