நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்தார். இடையில் திருமணமாகி குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்தார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு தனது பிறந்தநாளில் தனது புதிய காதலனை அறிமுகம் செய்தார் அமலா பால். ஜகத் தேசாய் உடனான அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட அமலா பால் இந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு நவம்பர் மாதம் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் அமலா பால் ஆண் குழந்தை பிறந்ததையடுத்து, அந்த குழந்தைக்கு ‘இலை’ என பெயர் சூட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் லெவல் கிராஸ் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு கல்லூரிக்கு மினி ஸ்கர்ட் அணிந்து மாணவிகளுடன் நடனமாடினார் அமலா பால். இது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கல்லூரிக்கு வரும்போது இதுபோன்ற ஆடைகளை அணியலாமா என்ற கேள்வியும் எழுந்தது.
அதற்கு பதிலளித்த அமலா பால், “எனக்கு வசதியான ஆடைகளை மட்டுமே என்னால் அணிய முடியும். எனது உடையில் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என் உடையில் கவர்ச்சி இல்லை ஆனால் உங்கள் கேமராக்கள் அதை கவர்ச்சியாக காட்டுகின்றன. நான் பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள் என அனைத்து வகையான ஆடைகளை அணிந்து வரலாமா என்ற கேள்வி எழுந்தது.