முக்கியமான தமிழ் இயக்குனர்களில் ஒருவரான பாண்டிராஜ், நடிகர் அஜித் குமார் குறித்து தெரிவித்த ஒரு பழைய பேட்டி தற்பொழுது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “அஜித்தை வைத்து தேவர் மகன் பாணியில், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஒரு சக்திவாய்ந்த படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது” என்றார்.

அவரது இந்த எண்ணம், அஜித் ரசிகர்களிடையே மிகுந்த எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வீரம் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித் கிராமத்து உடையில், வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டியுள்ளார். ஆனால், அவை முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் இருந்தவை அல்ல. அந்த வகையில், பாண்டிராஜ் திட்டமிடும் 100% கிராமத்து படம் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மனதில் வேறு அளவுக்கு உயர்ந்துள்ளது.
பாண்டிராஜ் கூறுகையில், “நான் ரஜினி, விஜய் ஆகியோருடன் படங்கள் எடுக்க வேண்டும் என இயக்குனர்கள் கனவு காண்பதைப் போலத்தான், அஜித்தை வைத்து ஒரு கிராமத்து அரசியல், குடும்ப பாச வலையமைப்புள்ள படத்தை உருவாக்க வேண்டும் என்பது என் கனவாக உள்ளது” என கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே புதிய படத்திற்கான ஒரு அசத்தலான ஆவலை உருவாக்கியுள்ளது.
தற்போது, அஜித் குமார் தனது 64வது படமான AK64-இல் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைவதில் முழு தீவிரத்துடன் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கவுள்ளதாக தகவல். அதுவரை கார் பந்தயங்களில் பிஸியாக இருக்கும் அவர், அதன் பின் தான் பட திட்டங்களை தொடங்குவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பாண்டிராஜ் – அஜித் கூட்டணி எதிர்காலத்தில் கைகொடுத்தால், அது ரசிகர்களுக்கு ஒரு வேற லெவல் அனுபவம் தரும் என நினைக்கப்படுகிறது. அஜித் ரசிகர்களின் ஆசையும், பாண்டிராஜின் இயக்கக் கனவும் ஒருநாளில் நனவாகி, தேவர் மகன் போல ஒரு அதிரடியான கிராமத்து மாஸ் படம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்!