ஜூலை மாதம் முழுவதும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இறுதிக் காலங்களில் மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் விலை குறைந்ததாலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த உயர்வாலும் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

தங்க விலை நிலவரம்:
கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கம் விலை குறைவடைந்தது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டினர். ஜூலை 29ஆம் தேதி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.9,150க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நாள் சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.73,200 ஆக இருந்தது.
ஆனால் இன்று ஜூலை 30, தங்கம் விலையில் மீண்டும் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,210 ஆகவும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற தங்க வகை மற்றும் வெள்ளி விலை:
18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,595 என்றும், சவரன் ரூ.60,760 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.127 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,27,000 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றங்கள், சர்வதேச சந்தை நிலவரம், ரூபாய் மதிப்பு மாற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுகின்றன. விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வணிகர்கள் கூறுகிறார்கள்.