ஒரே குடும்பத்தின் நலனுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் உயிரைப் பணயம் வைக்கும் அவலம் வரலாற்றில் நடந்ததில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
தொடரும் கொலை- அரசியல் கட்சியினர் அதிர்ச்சி
தமிழகத்தில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடலூரில் அதிமுக வார்டு செயலாளர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர், சிவகங்கையில் பாஜக நிர்வாகி ஆகியோர் தொடர் கொலைகளில் தமிழக சட்டம் ஒழுங்கு சீர்கேடு என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை கூட்டுறவு கோட்ட மாவட்ட செயலாளர் செல்வக்குமார் நேற்று இரவு சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக பாஜக அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
முதல்வர் பதவி- தார்மீக உரிமை உள்ளதா?
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் கொலைகளின் தலைநகராக மாறிவிட்டது. சமூகவிரோதிகளுக்கு அரசு, காவல்துறை என்ற பயம் இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், தினம் தினம் அரசியல் நாடகம் நடத்தி வருகிறார்.
காவல்துறையை கூலிப்படையாக மாற்றி, ஒட்டுமொத்த மாநில மக்களும் ஒரே குடும்பத்துக்காக உயிரைப் பணயம் வைக்கும் அவல நிலை வரலாற்றில் இருந்ததில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்காத சட்டமீறலை தொடரும் திரு. ஸ்டாலின் முதலமைச்சராக நீடிக்க தார்மீக உரிமை உள்ளதா என்பதை ஸ்டாலின் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார் அண்ணாமலை.