லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்னே பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படம் ரூ.1000 கோடி வரை வசூலிக்கும் என எண்ணங்கள் இருந்தபோதிலும், தற்போது சில போஸ்டர்களைச் சுற்றி எழுந்துள்ள விவாதம், ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் இரண்டு முக்கிய போஸ்டர்கள், ஹாலிவுட் படங்களான Madame மற்றும் Rebel Moon போன்றவைகளின் ஸ்டைலுக்கு ஒத்திருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது போஸ்டர் காப்பியடிப்பு எனவும், படக்குழு தங்களுடைய படைப்பாற்றலைக் காட்ட முடியாமல் விட்டுவிட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. “போஸ்டரே இவ்வளவு inspiration-ல் வந்ததானா, அப்போ கதையும் எங்கிருந்து வந்திருக்கும்?” என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதேபோன்று, ‘கூலி’ படத்தின் ‘Power House’ பாடலுக்கும் ஒரு பாப் பாடலுடன் இசை ஒற்றுமை உள்ளது என சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் உருவாகி வருகின்றன. இதனால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவருக்கும் காப்பி போட்டி என விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், அமீர் கான் உள்ளிட்டோர் நடித்து வரும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், இந்த காப்பி விவகாரம் படம் மீதான நம்பிக்கையை பாதிக்குமா என்பதே தற்போது சினிமா வட்டாரங்களின் கேள்வி.