‘காந்தாரா’ படத்தின் 3-வது பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘காந்தாரா’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அதன் 2-வது பாகம் தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள படத்தின் விளம்பரப் பணிகள் விரைவில் தொடங்கும்.
இதையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ‘காந்தாரா’ படத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா 2’ படமாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, 3-வது பாகத்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

அதில், ‘காந்தாரா’ படத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை ரிஷப் ஷெட்டி சொல்ல திட்டமிட்டுள்ளார். அதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூனியர் என்.டி.ஆர் தரப்பு இந்த தகவலை மறுக்கவில்லை. இந்த தகவல் உண்மை என்று கூறப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் கர்நாடகா சென்றபோது, ரிஷப் ஷெட்டி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.