சமீபத்தில் தனுஷ் நடித்த ராயன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படத்தை பார்க்க முடியாது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் டிமாண்டி காலனி 2 படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் வழங்கியதால் படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமான்டி காலனி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்கும் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து படக்குழுவினர் புரொமோஷன் பணிகளை தொடங்க உள்ளதாகவும், இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் தமிழகம் முழுவதும் ப்ரோமோஷன் பணிகளை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், பிக்பாஸ் அர்ச்சனா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், குமரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.