அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், கடந்த 5 மாதங்களில் உலகம் முழுவதும் நடந்த 5 முக்கிய போர்களை தாம் முடிவுக்கு கொண்டுவந்ததாக பெருமைபடுகிறார். இதில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரும் அடங்கும் என அவர் மீண்டும் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கையும், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தாக்குதலும் தொடர்ந்து, இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவித்தன. ஆனால், இதற்கான முழுப் பாராட்டும் தமக்கே செல்லும் என டிரம்ப் தெரிவிக்கிறார்.
அதிபர் டிரம்ப் கூறுகையில், “கடந்த 5 மாதங்களில் 5 போர்களை நான் நிறுத்தினேன். இதிலிருந்து உலகம் ஒரு பெரிய பாடம் கற்க வேண்டும். உக்ரைன் போரும், பைடனின் நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
இந்தியா–பாக் போர் முடிவையும் நான் முடித்தேன்” என்றார். மத்திய அரசு இதற்கு முந்தைய காலங்களில் மறுப்பு தெரிவித்திருந்தாலும், டிரம்ப் தொடர்ச்சியாக இதேவிதமான பேச்சுக்களை முன்வைத்து வருகிறார்.