சென்னையில் இருந்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு எழுவதற்கான முக்கிய நிபந்தனை மாற்றப்பட்டுள்ளது. மாணவர்கள் முழு ஆண்டு பள்ளி வேலை நாட்களில் குறைந்தபட்சம் 75 சதவிகித நாட்கள் வருகையுடன் இருக்க வேண்டும் என்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

75% வருகை இல்லாத மாணவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. இதேபோல, பள்ளி நிர்வாகங்கள் இந்த தகவலை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து வருகை குறைவாக இருந்தால், பெற்றோரின் மொபைலுக்கும் மின்னஞ்சலுக்கும் தகவல் அனுப்ப வேண்டும்.
விளையாட்டு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வருகை குறைந்திருப்பின், உரிய ஆவணங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ விண்ணப்பங்களின் அடிப்படையில் மட்டும் தேர்வுக்கு அனுமதிக்கலாம். இந்த உத்தரவு மாணவர்களின் பாடத்திட்ட பங்கேற்பை ஊக்குவிக்கப்படுவதாகவும், தேர்வுகளின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.