அண்மையில் 71வது தேசிய விருதில் சிறந்த துணை நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்வசி, தனது திரைப்பயணத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ‘முந்தானை முடிச்சு’ படத்தின் நேரத்தில் பள்ளி தேர்வுகளை எழுதி, 13-வது வயதிலேயே கதாநாயகியாக உயர்ந்த சம்பவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

ஒரு பாடல் மூலம் ரசிகர்கள் பின்னால் சுத்தத் தொடங்கியதாகவும், ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் கமல்ஹாசன் தன்னிடம் மன்னிப்பு கூறாமலே காலில் விழுந்த சம்பவமும் நடந்ததாக கூறுகிறார். இது அவரது உணர்வுகளைத் தூண்டிய ஒரு நிகழ்வாக இருந்தது.
கமல்ஹாசனின் அறிவுரையின்படி, மலையாள சினிமாவைத் தேர்வு செய்ததும், கிளாமர் பாணியில் நடிக்க மறுத்ததாலும், அவர் தனக்கான தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார். இன்று சில நடிகைகள் கிளாமராக நடித்து முக்கியத்துவம் பெறும் சூழலில், கதைமையமான பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது சவாலான காரியமாக இருப்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.