சென்னை: சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ப்யூட்டிபுல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் பரிதாபங்கள் கோபி – சுதாகர். யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஓ காட் பியூட்டிபுல் ( Oh God Beautiful ) என்ற இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.
விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. வேனும் மச்சா அமைதி என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த புரோமோ சிங்கிள் பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.