டார்வின்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் டார்வினில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டிம் டேவிட் 83 (52 பந்துகள்) மற்றும் கேமரூன் கிரீன் 35 (13 பந்துகள்) ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பாக கவேனா மபாகா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 179 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ரியான் ரிக்கல்டன் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பென் டூர்ஷுயிஸ் ஆகியோர் ஆஸ்திரேலியா சார்பாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டிம் டேவிட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டி20ஐ நாளை நடைபெறும்.