சென்னை: டெல்லியை தளமாகக் கொண்ட பிஎல்எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.711 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 44% அதிகமாகும்.
இதேபோல், வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தவணைக்கு முந்தைய வருவாய் (ஈபிஐடிடிஏ) 53% அதிகரித்து ரூ.204 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் ரூ.181 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 50% அதிகமாகும்.

2005-ல் செயல்படத் தொடங்கிய இந்த அமைப்பு, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கு விசா மற்றும் தூதரக சேவைகளை வழங்குகிறது. கூடுதலாக, இது மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள், குடியுரிமை மற்றும் வதிவிட சேவைகளை வழங்குகிறது.
அதன் துணை நிறுவனமான பிஎல்எஸ் இ-சர்வீசஸ் மூலமாகவும் குடிமக்கள் சேவைகள் வழங்கப்படுகின்றன. 46-க்கும் மேற்பட்ட அரசு வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த அமைப்பு, 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் 50,000-க்கும் மேற்பட்ட சேவை மையங்களை இயக்குகிறது.