புது டெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவின் டம்பாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முனீர், இந்தியாவுக்கு அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
மேலும், இந்த நிகழ்வில், இந்தியாவுடனான சமீபத்திய மோதலின் போது வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவை முனீர் குறிப்பிட்டதாகவும், அதில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் புகைப்படம் குர்ஆனின் வசனத்துடன் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முறை இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் தான் என்ன செய்வேன் என்பதைக் காட்டவே அவர் அதைச் செய்ததாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழும கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.