தேவையான பொருட்கள்:
சீஸ் க்யூப்ஸ் – 3
குடைமிளகாய் – பாதி
ஸ்வீட் கார்ன் – 1 கைப்பிடி
பிட்சா சீசனிங் – 1/2 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1/4 டீஸ்பூன்
பிரட் – 7 துண்டுகள்
தக்காளி கெட்சப் – தேவையான அளவு
வெண்ணெய் – சிறிது
செய்முறை:
முதலில் சீஸ் க்யூப்களை துருவிக் கொள்ள வேண்டும். அதேப் போல் குடைமிளகாயை பொடியாக நறுக்கி, அதை சீஸ் உடன் சேர்க்க வேண்டும். அதன் பின் ஸ்வீட் கார்னை அதில் ஒரு கைப்பிடி சேர்க்க வேண்டும். பின்பு அதில் பிட்சா சீசனிங், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு பிரட் துண்டுகளை எடுத்து, அதன் மேல் தக்காளி கெட்சப்பை தடவி, கலந்து வைத்துள்ள சீஸ் கலவையை பரப்பி விட வேண்டும்.
ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை தடவி, முதலில் ஒரு பிரட் துண்டை அதில் வைத்து, குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்தால், சுவையான பிரட் பிட்சா தயார்.