சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தினமும் 640-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில், ரயில் சேவைகள் வழக்கமாக 30 சதவீதம் குறைக்கப்படும்.

அதன்படி, இன்று சுதந்திர தினத்தையொட்டி தேசிய விடுமுறை என்பதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை போன்ற மின்சார ரயில் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு சென்னை ரயில்வே பிரிவு தெரிவித்துள்ளது.