புதுடில்லி: 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் உற்சாகமாக கொண்டாடினர்.
டில்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தியதுடன், மாநிலங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனுடன், சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மாலத்தீவு போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள் பெருமிதத்துடன் சுதந்திர தின நிகழ்வுகளை நடத்தினர்.
அங்கு தேசியக்கொடி ஏற்றல், கலாச்சார நிகழ்ச்சிகள், தேசபக்தி பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாரம்பரிய உடைகளில் கலந்து கொண்டு, இந்திய பாரம்பரியத்தையும் தேசபக்தியையும் வெளிப்படுத்தினர்.
சமூக ஊடகங்களில் இந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தின.