மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் சமீபத்திய தேர்தலில், நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் தலைவராக ஒரு பெண் பதவியேற்றது இதுவே முதல் முறை.
நடிகைகளும் முக்கிய நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, சங்கத்தின் நிர்வாகத்தில் அதிருப்தி அடைந்த சில முன்னணி நடிகைகள் சங்கத்தை விட்டு வெளியேறினர். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்வேதா மேனன், வெளியேறியவர்கள் திரும்பி வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், நடிகை பாவனா, 2017-ம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட பிரச்சனையில் சங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சங்கத்தை விட்டு வெளியேறினார். சங்கத்தில் மீண்டும் இணைவது குறித்து கேட்டபோது, “நான் இப்போது சங்கத்தில் உறுப்பினராக இல்லை.
எனவே, சங்கத்தில் தற்போதைய மாற்றங்கள் குறித்து எனக்குத் தெரியாது. சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பற்றிப் பேசுவேன்” என்றார்.