வாணியம்பாடி: இயந்திரத்தில் சிக்கி துண்டான இளைஞரின் கையை 7 மணிநேரம் அறுவை சிகிச்சை மூலம் இணைத்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.
வாணியம்பாடி அருகே கல் அறுக்கும் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி முற்றிலும் துண்டான இடது கையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற அந்த இளைஞருக்கு டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சுமார் 7 மணி நேர அறுவை சிகிச்சையில் கையின் எலும்புகள், நரம்புகள், தசைகள், ரத்த நாளங்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன.