சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூரில் உள்ள மார்க் சொர்ணபூமி என்ற இடத்தில் அனிருத்தின் ‘ஹுக்கும்’ என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முன்பதிவு குறித்த விவரங்களையும் அனிருத் வெளியிட்டிருந்தார்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொள்ளும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாகக் கூறி, இந்த இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி, செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு சார்பாக வழக்கறிஞர் திருமூர்த்தி இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மேல்முறையீடு செய்தார்.
இதைத் தொடர்ந்து, மனு தாக்கல் செய்யப்பட்டால், இன்று பிற்பகல் 2:15 மணிக்கு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.