கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 மிகப்பெரிய படம். 2018 இல் தொடங்கிய சுமார் 4 வருட கடின உழைப்புக்குப் பிறகு, இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 அன்று திரைக்கு வந்தது. இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். மேலும், இப்படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது.
இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் ரிசல்ட் அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் தகர்த்தது. இந்தியன் 2 அதன் மந்தமான திரைக்கதையால் எதிர்மறையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இதனால் முதல் வாரத்திலேயே படம் துண்டிக்கப்பட்டது.
கமல்ஹாசனின் கேரியரில் இந்தியன் 2 மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் அவரது கேரியரில் மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. ஆனால், இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் அதிக ரிஸ்க் எடுத்ததை பலரும் பாராட்டினர். இந்தியன் 2 படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில், தற்போது கமல் ரசிகர்களின் போஸ்டர் ஒன்று படத்தின் வசூல் குறித்து வைரலாகி வருகிறது.
கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் 20 நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்திருக்கிறது, ‘வெறுப்பை பரப்பினாலும் நெருப்பிடம் பலிக்காது’ என்ற பஞ்ச் வசனத்துடன் வெளியான போஸ்டரில் அது எப்படி என்று கேட்பவர்களுக்கு கீழே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை Netflix நிறுவனம் ரூ.220 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் ரூ.120 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.