கல்லீரல் மனித உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அது நம் உடலிலிருந்து நச்சுகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், செரிமானம் மற்றும் சக்தி உற்பத்திக்கும் அத்தியாவசிய பங்கு வகிக்கிறது. அதனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியமானது.
கல்லீரலின் ஆரோக்கியத்தை காக்க உதவும் பல உணவுகள் உள்ளன. பூசணி விதைகள் மற்றும் அவகேடோ போன்றவை நல்ல கொழுப்பு மற்றும் மெக்னீசியத்தை வழங்கி கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றன. ஆலிவ் எண்ணெய் மற்றும் கீரை சேர்ந்து எடுத்துக்கொள்ளப்படும் போது குளோரோபில் மற்றும் நைட்ரேட் உடலுக்குக் கிடைக்கின்றன. இதனால் கல்லீரலில் கொழுப்பு படிவு குறைவதோடு, செயல்பாடு சீராகிறது.

கருப்பு பீன்ஸ் நார்ச்சத்து மற்றும் பாலிபீனால்களால் நிறைந்தது. இது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து கல்லீரலின் வீக்கம் குறைய உதவுகிறது. டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இன்சுலின் சென்சிட்டிவிட்டியையும் அதிகரிக்கின்றன.
மொச்சைக்கொட்டை சிறந்த புரதத்தை வழங்குவதுடன் சாச்சுரேட்டட் கொழுப்பு இல்லாமல் இருக்கும். இதனால் கல்லீரலில் கொழுப்பு சேமிப்பு குறைய உதவுகிறது. அதேபோல் பாதாம் மற்றும் முந்திரி போன்ற கொட்டைகளில் நல்ல கொழுப்பு, வைட்டமின் E மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளன. இவை கல்லீரல் செல்களைப் பாதுகாக்கும் சக்தி வாய்ந்தவை.
இந்த உணவுகளை அளவோடு தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிக அளவு எடுத்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான இந்த உணவுகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கொழுப்பு கல்லீரல் நோய் வராமலும், வந்திருந்தால் அதை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
சமச்சீரான உணவுமுறை, போதிய ஓய்வு, மற்றும் தினசரி உடற்பயிற்சி இணைந்தால் கல்லீரல் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும்.