ஒடிசா அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய வி.கே. பாண்டியன் மீண்டும் நவீன் பட்நாயக்குடன் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் (பிஜேடி) தோல்வியைச் சந்தித்தபின், பாண்டியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது மீண்டும் அவரின் உருவம் கட்சித் தலைமையத்தில் வலுவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பாண்டியன், 2023ல் விருப்ப ஓய்வுபெற்று அரசியலில் குதித்தார். நவீன் பட்நாயக்கின் நெருங்கியவராக இருந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய வேட்பாக வலம் வந்தார். இவரது செயல்பாடுகளுக்குப் பதிலாக, நவீன் பட்நாயக்கின் வாரிசு என்றும் சில தகவல்கள் வெளிவந்தன. இதற்கேற்ப எதிர்க்கட்சிகள் பாண்டியனையே அரசு முடிவுகளை எடுத்தவர் என குற்றம்சாட்டின.
தற்போது நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் நிலையில், அவரை நேரில் சந்திக்காமல் இருந்த பாண்டியன், மீண்டும் மருத்துவமனையில் நவீனை அணுகியதும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் சிகிச்சை பெறும் நவீனின் உடல்நிலை குறித்த தகவல்களை பாண்டியன் வெளியிடாமை கட்சியினரிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது.
பிஜேடி எம்எல்ஏ ரணேந்திர ஸ்வைன், பாண்டியனின் மீளுபிரவேசத்தை கடுமையாக விமர்சிக்க, பிஜேடி எம்பி தேபாஷிஷ் சமந்தராயும் அவரது செயல்களைத் தவறானவை என கண்டித்துள்ளார். முக்கியமான தகவல்களை பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடமிருந்து மறைப்பது பொறுப்பற்ற நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாண்டியன் மீண்டும் கட்சியிலும், நவீனின் நெருக்கத்திலும் செயல்பட தொடங்கியிருப்பது, பிஜேடி கட்சிக்குள் புதிய பிரிவினைகளை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது குடும்பத் தொடர்புகளும் அரசியல் விவகாரங்களும் தற்போது மீண்டும் விரிவாக விவாதிக்கப்படுகின்றன.