வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூரிக்கு மவுசு அதிகம். ஆனால் எண்ணெயில் பெரிதும் பொரிக்கப்படுவதால், பலரும் அதை தவிர்க்க நேரிடும். ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டிய காலத்தில், சுவை மற்றும் சத்து இரண்டும் சமமாக இருப்பது முக்கியம். பூரியை சுடும்போது எண்ணெய் குறைவாக இழுக்கும் வகையில் சில தந்திரங்களைப் பின்பற்றினால், சுகாதாரக் கோணத்திலும், சுவையிலும் சமநிலை ஏற்படும்.

முதல் டிப்ஸ் – மாவுக்கு நெய் சேர்க்கவும். பூரி மாவை பிசைக்கும் போது, தண்ணீர் ஊற்றும் முன் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். இது பூரி சுடும்போது வெடிக்காமல் இருக்கும். வெடிக்கும் பூரிகளில் எண்ணெய் அதிகம் ஊறும். எனவே, பூரி மென்மையாக, கரகரப்பாக இருப்பதோடு, எண்ணெய் இழக்காததற்கும் இந்த வழி சிறந்தது.
இரண்டாவது – மாவை ஊற வைக்க வேண்டும். மாவை பிசைத்த உடனே உருட்டி சுடக்கூடாது. குறைந்தது 15–30 நிமிடங்கள் மாவை மூடி வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது பூரி ஒட்டையாக சுடப்படும், விரிசல் ஏற்படாது, எண்ணெய் சேரமால் இருக்கும். பூரி மென்மையாகவும், சப்பாத்திக்கே உரிய பதத்தோடு இருக்கும்.
மூன்றாவது – உதிர்ந்த மாவைப் தவிர்க்கவும். பூரி உருட்டும் போது மேல் மாவை தூவுவது வழக்கம். ஆனால் இது எண்ணெயை அதிகமாக இழுக்கச் செய்யும். அதனால் பூரி உருடும்போது மாவு ஒட்டாமல் இருக்க எளிதாக கட்டையால் மெதுவாக உருட்டவும். மேலும், தண்ணீர் அளவு கூடுதலாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் கூட எண்ணெய் அதிகம் தேயும்.
இந்த மூன்று எளிய டிப்ஸ்களால், உங்கள் பூரி சுவையானதும், ஆரோக்கியமானதும் இருக்கும். இனி பூரி சுட ஆரோக்கிய கவலையில்லை!